Director's Desk


பேராசிரியர். D.முத்தமிழ் செல்வன் M.Sc., M.Phil., B.Ed.,
இயக்குனர்
உங்களுடன் ஓரிரு வார்த்தைகளில்
வேலையில்லை ! சம்பளமில்லை ! திருப்தியில்லை என கூறுவோர்க்கு ஒரு செய்தி. வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. ஆனால் அதற்கான தகுதியான நபர்கள் தான் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை. வேலையில் சேர நினைக்கும் ஒவ்வொருவரும் முதலில் கேட்பது எவ்வளவு சம்பளம்? எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்? என்று தான் கேட்கின்றனர்கள். ஒவ்வொருவரும் நினைப்பது குறைந்த வேலை, அதிக சம்பளம். இது சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு. இது தவறல்ல ஆனால் உழைக்காமல் ஊதியமும், சளைக்காமல் சம்பளமும் சாத்தியப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.
எந்த வேலையானாலும் நூறு சதவீதம் அர்பணிப்போடு செய்தால் வெற்றி நிச்சயம். அதனால் தான்
எம் மையத்தில்
        சிகரம் தொட்டோர் சிறப்பிக்கப்படுகிறார்கள் -
                    சிகரம் தொட பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

சாதனையாளர்களாக யாரும் பிறப்பதில்லை! உருவாக்குவதுமில்லை!! அவர்கள் உருவாகிறார்கள்!!!
அதற்கு சீரிய சிந்தனை, சிறந்த திட்டமிடல், கடின உழைப்பு...
இவையே வெற்றியை ஈட்டும் தாரக மந்திரங்கள்.