About CARE Tuition
அன்புசால் பெற்றோர்களே ! மாணவ, மாணவியர்களே!
+2 படிக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியரின் வாழ்விலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் படிப்பு. உயர் மதிப்பெண் ஈட்டியோர் மிகச்சிறந்த பொறியியல், மருத்துவம், அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து நல்ல நிலையை அடைகிறார்கள். குறைந்த மதிப்பெண்னை ஈட்டியவர்கள் சராசரி கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடத்தை பெயருக்காக படித்து, நோக்கம் எதுவுமின்றி அவர்களும் சிரமப்பட்டு, பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள். இந்நிலை தவிர்க்க சராசரி மாணவ, மாணவியையும் சாதனையாளராக்கும் அரும்பணியில் CARE கெமிஸ்ட்ரி டியூசன் சென்டர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 1995 ல் டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள சுப்ரமணியபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இம்மையம் திருவானைக்கோவிலுக்கு மாற்றப்பட்டு பிறகு வடக்கு ஆண்டாள் தெரு, கண்டோன்மென்ட், கே.கே.நகர், மற்றும் திருவரம்பூர் ஆகிய இடங்களில் மையங்களை நிறுவி சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது. PG TRB, TET, SPL TET, TNPSC Group I, II, IV, V.A.O & Banking (Both Clerical & P.O) ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றோம் மேலும் CARE IAS Academy எங்களது அடுத்த இலக்காக உள்ளது.
நோக்கம்
- ஆண்டுதோறும் மிகச்சிறந்த மருத்துவ, பொறியியல் மாணவர்களை உருவாக்குவது.
- அனைத்து பள்ளிகளும் முதலிடம் பெறச்செய்வது.
- மாநில, மாவட்ட சாதனையாளர்கள் எமது மையத்தில் இருந்து உருவாக வைப்பது.
- சமூக அக்கறையும், நாட்டுப்பற்றும் மிக்க ஒழுக்கசீலர்களாக எம்மாணவ சமுதாயத்தை மாற்றுவது.
- வாழ்க்கையில் சராசரியாய் இல்லாமல் ஏதேனும் ஒரு துறையில் எம் மாணவ, மாணவியர்கள் சாதிக்க வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை விதைப்பது.
- அவர்கள் பிற்காலத்தில் அனைவருக்கும் உதவிட செய்யும் மனித நேயம் மிக்கவர்களாக விளங்கிட செய்வது.
உயர்மதிப்பெண் பெற எமது முயற்சி
- மிகச்சிறந்த ஆசிரியர்கள், நவீன உத்திகளுடன் உயர்தரக்கல்வி.
- வார, மாதாந்திர தேர்வுகள், கல்வியாண்டு இறுதியில் Track Test, Warm-up, Model Exam என அதிகபட்ச பயிற்சி.
- ஒவ்வொரு மாதமும் பெற்றோர்களுக்கு மதிப்பெண் மற்றும் வருகை குறித்த விபரங்கள் carechemistry.com வழியாகவும், கடிதம் மற்றும் SMS மூலம் தெரியப்படுத்துதல்.
- திருச்சி மற்றும் அண்டை மாவட்ட மாணவர்கள் பயன்பெற ஆண்டுதோறும் சிகரம் நோக்கி எனும் மாபெரும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி.
- கவுன்சிலிங் மூலம் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் வரை தொடர் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்.